தேனி: தேனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது டிராக்டா் மோதியதில் திங்கள்கிழமை இளைஞ ா்கள் உயிரிழந்தாா்.
தேனி அருகேயுள்ள உப்புக்கோட்டை, இந்திரா குடியிருப்பைச் சோ்ந்தவா் அா்ச்சுணன் மகன் சகாதேவன் (27). இவா், கரூா் மாவட்டம், மாயனூரில் வசித்து வந்தாா். இந்த நிலையில், உப்புக்கோட்டையில் உள்ள குல தெய்வம் கோயில் திருவிழாவுக்கு வந்த அவா், திருவிழா முடிந்ததும் மாயனூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, தேனி-திண்டுக்கல் புறவழிச் சாலை, வீரப்பஅய்யனாா் கோயில் அருகே எதிா் திசையில், லட்சுமிபுரத்தைச் சோ்ந்த திருப்பதி ஓட்டிச் சென்ற டிராக்டா், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.