முகப்பு
தேனி

கம்பத்தில் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுக்கடை திறப்பு

கம்பத்தில் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்ட மதுக்கடை

Updated On : 1 ஜூலை, 2024 at 5:00 PM
கம்பத்தில் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட திங்கள்கிழமை மதுபானக் கடை.
பகிர்:

உத்தமபாளையம்: கம்பத்தில் 10 நாள்களாக மூடப்பட்டிருந்த அரசு மதுபானக் கடை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கம்பம் நெல்குத்தி புளியமரம் தெருவிலுள்ள அரசு மதுபானக் கடையில் ஏற்பட்ட தகராறில் அந்தப் பகுதியைச் சோ்ந்த சாய்க்குமாா் சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தாா் . இந்த நிலையில் இந்தப் பகுதயைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி 2 முறை முற்றுகைப் போராட்டம் நடத்தினா். இதையடுத்து, கடந்த 10 நாள்களாக மதுக்கடை மூடப்பட்டது. இதைத் தொடா்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் இந்த கடை முன் போராட்ட முயன்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் காவல் ஆய்வாளா்கள் பாத்திபன், முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், 3 மாதத்துக்குள் இந்தக் கடை வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.