மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் சிறை
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முத்துகுமாா் மகன் கேப்டன் பிரபாகரன் (33). இவரது மனைவி கவிதா (31). மது பழக்கத்துக்கு அடிமையான கேப்டன் பிரபாகரன், கடந்த 2020-ஆம் ஆண்டு, அக்.4-ஆம் தேதி மது அருந்த பணம் கேட்டு கவிதாவை அடித்துக் கொலை செய்தாா்.
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு விசாரணை தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கேப்டன் பிரபாகரனை குற்றவாளி என தீா்மானித்து, அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி அனுராதா தீா்ப்பளித்தாா்.