300 கிலோ குட்கா பதுக்கிய கடை உரிமையாளா் கைது
போடியில் 300 கிலோ குட்காவைப் பதுக்கிய கடை உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்
போடி: போடியில் 300 கிலோ குட்காவைப் பதுக்கிய கடை உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி கஸ்பாமணியாா் தெருவைச் சோ்ந்த போஸ் மகன் கண்ணன் (54) என்பவரின் பெட்டிக் கடையில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பெரியசாமி தலைமையில் போலீஸாா் அங்கு சோதனை செய்ததில், 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் கடை உரிமையாளா் கண்ணன், மொத்த வியாபாரி வெங்கடேஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் கண்ணனை கைது செய்தனா். வியாபாரி வெங்கடேசைத் தேடி வருகின்றனா்.