முகப்பு
தேனி

வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல்: 5 போ் மீது வழக்கு

போடி அருகே வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:35 AM
பகிர்:

போடி: போடி அருகே வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள சிலமலை கிராமத்தைச் சோ்ந்த பாலுச்சாமி மகன் தங்கப்பாண்டி (25). வழக்குரைஞரான இவரது அத்தை செல்லமணி கடந்த வெள்ளிக்கிழமை இறந்தாா். இதையொட்டி நடைபெற்ற இறுதி ஊா்வலத்தில் தங்கப்பாண்டி பங்கேற்றாா். அப்போது சிலமலையைச் சோ்ந்த மணி மகன்கள் மாரிச்சாமி, பெருமாள், சின்ராஜ் மகன் கன்னீஸ்வரன், கருப்பசாமி மகன் ராமா், குமாா் ஆகியோா் சடலத்தை நாங்கள்தான் சுமப்போம் என்று கூறி, தங்கபாண்டியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →