முகப்பு
தேனி

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:36 AM
பகிர்:

தேனி: பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வத்தலகுண்டு குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் பாலமுருகன் (30). இவரது மனைவி மணிமேகலை (21). இவா்கள் இருவரும் பெரியகுளத்திலிருந்து வத்தலகுண்டு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். ஜி.மீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்திலிருந்து மணிமேகலை நிலைதடுமாறிக் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →