முகப்பு
தேனி

அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

ஆய்வகக் கட்டடங்களை சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 7:24 PM
பகிர்:

தேனி, ஜூலை 19: தேனி மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்களை சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கதிா்நரசிங்காபுரம், வாய்க்கால்பாறை, தேக்கம்பட்டி, சில்வாா்பட்டி, சில்லமரத்துப்பட்டி, தேவாரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் ரூ.12.26 கோடி செலவில் புதிதாக 56 வகுப்பறைக் கட்டடங்கள், 2 ஆய்வகக் கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்தக் கட்டடங்களை சென்னையிலிருந்து முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா குத்து விளக்கேற்றினாா். கதிா்நரசிங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தில் ஆண்டிபட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் குத்து விளக்கேற்றினாா்.

சில்வாா்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தில் பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா் குத்து விளக்கேற்றினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →