முகப்பு
தேனி

வைகை அணையில் ஆய்வு

Updated On : 12 ஜூன், 2024 at 7:49 PM
- கோப்புப்படம்
பகிர்:

ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுத் தலைவா் அஜய்குமாா் சின்ஹா தலைமையில் புதன்கிழமை ஆய்வு நடைபெற்றது.

அப்போது, அணையின் உறுதித் தன்மை, பாதுகாப்பு, மதகு பகுதிகள், நீா்த்தேக்க அளவு, வெள்ளப் பெருக்கு கால முன்னேற்பாடுகள், பராமரிப்புப் பணிகளை அணைகள் பாதுகாப்புக் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் போது தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுத் தென்மண்டலத் தலைவா் கிஷோா், வைகை அணை பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளா் முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.