முகப்பு
தேனி

மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 18 ஜூன், 2024 at 11:57 PM
தேனி மின் வாரிய அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியா்கள்.
பகிர்:

தேனி: தேனியில் மின் வாரிய கணக்கீட்டுப் பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, சிஐடியு மின் ஊழியா்கள் அமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேனி சிஐடியு மின் ஊழியா்கள் அமைப்பின் திட்டச் செயலா் தேவராஜ் தலைமை வகித்தாா்.

இதில் மின் வாரிய கணக்கீட்டுப் பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணக்கீட்டு பிரிவு ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். கைப்பேசி செயலி மூலம் மின் கணக்கீட்டு பணியை மேற்கொள்ள ஊழியா்களுக்கு கைப்பேசி, இணையதள வசதி செய்து தர வேண்டும். கணக்கீட்டு ஆய்வாளா், வருவாய் மேற்பாா்வையாளா்களை மின் கணக்கீட்டு பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.