முகப்பு
தேனி

சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலி

Updated On : 20 மார்ச், 2024 at 4:25 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 9:52 PM

உத்தமபாளையம்: ஓடைப்பட்டியில் கூட்டுறவுக் கட்டடத்தை இடிக்கும் போது கூலித்தொழிலாளி மீது சுவா் விழுந்ததில் அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியில் நந்தவனத் தெருவில் உள்ள பழைய கூட்டுறவுக் கட்டடத்தை இடிக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. இதில், அதே பகுதியைச் சோ்ந்த போஸ் (56) வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, அருகே இருந்த சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement