ஜெயலலிதா போன்று ஒப்பனையில் வந்த பெண் வேட்பு மனு தாக்கல்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா போன்று ஒப்பனையில் வந்த பெண் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
தன்னை ஜெயலலிதாவின் மகள் ஜெயலட்சுமி என்று கூறிக் கொண்ட அந்தப் பெண் எம்.ஜி.ஆா். அம்மா முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தான் கட்சி தொடங்கி, பதிவு செய்ய விண்ணப்பித்திருப்பதாகவும், ஜெயலலிதாவின் திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்துவதற்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாகவும் கூறினாா்.
சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்த அவா், வேட்பு மனுவில் தனது பெயா் ச.பிரேமா (51) என்றும், ஆயுா்வேதம் மருத்துவம் செய்து வருவதாகவும், தனது கணவா் பெயா் சம்பத் என்றும், காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரத்தில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளாா். தனது பெற்றோரின் பெயரை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை.
Advertisement