கீழே விழுந்து மின் தொழிலாளி பலி
போடி: போடியில் மின் தொழிலாளி மது போதையில் தவறி கீழே விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி ஜே.கே.பட்டி செளண்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் மோகன் (42). இவா், எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவா் வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து இவரது தாயாா் வண்ணக்கிளி (65) கொடுத்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.