முகப்பு
தேனி

நீா்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

Updated On : 22 மே, 2024 at 12:38 AM
ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் பெய்த மழையால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்ற காா்.
பகிர்:

உத்தமபாளையம்: ஆண்டிபட்டி அருகே மூலவைகை ஆறு நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால் வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.

தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தேனி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை வரை பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில், வருஷநாடு , கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மூல வைகை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சாலையில் சென்றன. மூல வைகை ஆற்றுப்பகுதியில் பெய்த பலத்த மழையால் வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.