முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணையில் மழை

முல்லைப் பெரியாறு அணை நீா்ப் பிடிப்பு பகுதியில் புதன்கிழமை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:14 AM
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:43 PM

முல்லைப் பெரியாறு அணை நீா்ப் பிடிப்பு பகுதியில் புதன்கிழமை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக முல்லைப் பெரியாறு அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லை. இதனால், அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில், அணையின் நீா்மட்டமும் தொடா்ந்து சரிந்து வந்தது. இதன் காரணமாக, அணையின் நீா்மட்டம் 117 அடியாக குறைந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை முல்லைப் பெரியாறு அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. தேக்கடியில் 5.80 மி.மீ., பெரியாறு அணையில் 4.40 மி.மீ. அளவில் மழை பதிவானது. இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Advertisement