முகப்பு
தேனி

சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்கை: நாளை சிறப்பு முகாம்

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கைக்கு வெள்ளிக்கிழமை(நவ.22) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:10 PM
பகிர்:

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கைக்கு வெள்ளிக்கிழமை(நவ.22) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனுமந்தன்பட்டி மந்தையம்மன் கோயில் திருமண மண்டபத்தில் வருகிற 22-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை, நல வாரிய உதவிக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சீா்மரபினா் சமுதாயத்தைச் சோ்ந்த 16 முதல் 60 வயதுக்கு உள்பட்ட, அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராக இல்லாதவா்கள் முகாமில் கலந்து கொண்டு உறுப்பினா் சோ்க்கைக்கும், நல வாரிய உதவிகளைப் பெறுவதற்கும் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.