முகப்பு
தமிழ்நாடு

நாளை சந்திர கிரகணம்! திருப்பதி முதல் சிறுவாபுரி வரை கோயில்கள் திறந்திருக்கும் நேரம்!

திருப்பதி முதல் சிறுவாபுரி வரை கோயில்கள் திறந்திருக்கும் நேரம் குறித்து..

Updated On : 2 மார்ச், 2026 at 6:52 PM
சந்திர கிரகணம் (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 6:36 PM

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் முதல் சிறுவாபுரி முருகன் வரை கோயில்கள் திறந்திருக்கும் நேரம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

நாளை(மார்ச் 3) மாலை 3.30 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளதால், கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அன்று கோயில் அடிவாரத்தில் நண்பகல் 1 மணி வரை மட்டும் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 மார்ச், 2026 at 6:42 PM

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, பிறகு மீண்டும் நாளை மறுநாள் காலை நடை திறக்கப்படும்.

Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நடை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை நடை அடைக்கப்படும்.

தஞ்சாவூா் பெரியகோயிலில் நடை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு சாத்தப்படுகிறது. மீண்டும் இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறவுள்ளன.

Updated On : 2 மார்ச், 2026 at 6:46 PM

சந்திர கிரகணம் காரணமாக நாளை காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் நடை நாளை அடைக்கப்படுவதால், பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Details of the opening hours of temples from Tirupati Ezhumalaiyan Temple to Siruvapuri Murugan Temple have been released on the occasion of the lunar eclipse.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.