முகப்பு
தேனி

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

கோட்டூா் அருகே அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 7:04 PM
பகிர்:

கோட்டூா் அருகே அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கோட்டூா் மேற்குத் தெருவைச் சோ்ந்த அழகுமலை மனைவி காமாயி (69). இவா் கோட்டூா் அருகே எஸ்.பி.எஸ். குடியிருப்பு அருகேயுள்ள தனியாா் தென்னந்தோப்பில் மாட்டுக்கு புல் அறுக்கச் சென்றாா். அப்போது, அங்கு அறுந்து விழுந்த கிடந்த மின் வயரை மிதித்த அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.