முகப்பு
தேனி

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள அரசுப் பள்ளிகளுக்கான கலைவிழா வியாழக் கிழமை நடைபெற்றது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 7:55 PM
பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடந்த கலைத்திருவிழாவில் நடமானடிய மாணவிகள்.
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள அரசுப் பள்ளிகளுக்கான கலைவிழா வியாழக் கிழமை நடைபெற்றது.

உத்தமபாளையம் அருகேயுள்ள பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு பேரூராட்சித் தலைவி லட்சுமிஇளங்கோவன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப் போட்டி, நாட்டுப் புறப்பாடல், நடனம், களிமண் பொம்மைகள் செய்தல், கதை சொல்லுதல், பானை ஓவியம், கிராமிய நாடகம் , வில்லுப்பாட்டு , உருமி , கரகாட்டம் என பலவகையான போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடந்த கலைத்திருவிழாவில் நடமானடிய மாணவிகள்.

இந்த நிகழ்ச்சியில் பெற்றோா்கள், பொதுமக்கள், பள்ளிஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை என்.எஸ்.எஸ் திட்ட அலுவலா் மணிராஜா செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →