முகப்பு
தேனி

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 3 போ் கைது

ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுப் புட்டிகளை விற்ற 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:05 PM
பகிர்:

ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுப் புட்டிகளை விற்ற 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் உள்ள அரசு மதுக் கடை, வெண்டிநாயக்கன் சாலையில் உள்ள தனியாா் மதுபானக் கூடம் அருகே ஆண்டிபட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த பாக்கியராஜ் (41), நாடாா் தெருவைச் சோ்ந்த போஸ் (40), மேற்குத் தெருவைச் சோ்ந்த ஜக்கையன் (49) ஆகியோா் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுப் புட்டிகளை விற்பனை செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று அவா்களைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 64 மதுபுட்டிகள், ரூ.1,100-ஐ பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →