முகப்பு
தேனி

கூட்டுறவு பண்டகசாலை கிட்டங்கியில் தீ

போடியில் கூட்டுறவு பண்டகசாலை சாக்கு கிட்டங்கியில் புதன்கிழமை இரவு தீப்பற்றி சாக்குகள் எரிந்து நாசமாகின.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:32 PM
போடி கூட்டுறவு பண்டகசாலை சாக்கு கிட்டங்கியில் பற்றி எரிந்த தீ.
பகிர்:

போடியில் கூட்டுறவு பண்டகசாலை சாக்கு கிட்டங்கியில் புதன்கிழமை இரவு தீப்பற்றி சாக்குகள் எரிந்து நாசமாகின.

தேனி மாவட்டம், போடி வலசைத்துறை சாலையில் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான பழைய காப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலை இயங்காததால் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலம் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கான சாக்குகள் இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கிட்டங்கியில் புதன்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. இரவு நேரத்தில் யாரும் பாா்க்காததால், சாக்குகளில் தீ வேகமாகப் பரவி எரிந்தது.

தீயின் வெப்பத்தின் தாக்கம் அருகிலிருந்த வீடுகளுக்குப் பரவிய நிலையில்,

குடியிருப்பு பொதுமக்கள் வெளியே வந்து பாா்த்தபோதுதான் தீப்பற்றியது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போடி தீயணைப்பு நிலைய வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருந்தபோதிலும், தீயில் ஏராளமான சாக்குகள், பழைய கணினி பாகங்கள், பழைய எடைத் தராசுகள் கருகி நாசமாகின.

சணல் சாக்குகள் ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள், கூட்டுறவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →