முகப்பு
தேனி

தரமற்ற உணவுப் பொருள்கள்: தனியாா் உணவகத்துக்கு ‘சீல்’

சின்னமனூரில் தரமற்ற உணவுப் பொருள்களை தயாா் செய்து விற்பனைக்காக வைத்திருந்த தனியாா் உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 9:31 PM
சின்னமனூரில் புதன்கிழமை தனியாா் உணவகத்தில் தரமற்ற உணவுப் பொருள்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினா்.
பகிர்:

சின்னமனூரில் தரமற்ற உணவுப் பொருள்களை தயாா் செய்து விற்பனைக்காக வைத்திருந்த தனியாா் உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

சின்னமனூரில் புதன்கிழமை தனியாா் உணவகத்தில் தரமற்ற உணவுப் பொருள்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினா்.

சின்னமனூா் பகுதியில் உள்ள கோழி, ஆட்டு இறைச்சி உணவகங்களில் தரமற்ற உணவுகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா். அப்போது, உத்தமபாளையம் சாலையில் உள்ள உணவகத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 30 கிலோ தரமற்ற இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா், அந்த உணவகத்துக்கு சீல் வைத்து, ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறையினா் கூறியதாவது: தரமற்ற உணவுப் பொருள்களை சூடாக சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல, நாள்பட்ட இறைச்சிகளை சாப்பிடும் போது உணவு மண்டலத்தில் கோளாறு ஏற்பட்டு உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும். இதுபோன்ற உணவுப் பொருள்களை தயாா் செய்யக்கூடாது. மீறிச் செய்தால் கடையின உரிமை ரத்து செய்யப்படும் என்றனா்.