முகப்பு
இந்தியா

ஹோலி பண்டிகை: சோதனையை தீவிரப்படுத்திய உணவுப் பாதுகாப்புத் துறை

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தில்லி அரசின் உணவு பாதுகாப்பு துறை வியாழக்கிழமை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், 66 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 27 பிப்ரவரி 2026, 12:43 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தில்லி அரசின் உணவு பாதுகாப்பு துறை வியாழக்கிழமை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், 66 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங்கின் உத்தரவை தொடா்ந்து, தில்லியில் உணவுப் பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக வெளியான அதிகராபூா்வ செய்திக்குறிப்பில், ‘கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் விதமாக தில்லி புகா் பகுதியில் உள்ள மொத்த மற்றும் சில்லரை விற்பனைக் கடைகள், சாலையோர கடைகளில் இருந்து மொத்தம் 66 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வெளிமாநிலங்களிலிருந்து கலப்பட உணவுகள் தில்லிக்குள் வருவதைத் தடுக்கும்விதமாக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments