கைது செய்யப்பட்ட முகமது சிஜாஸ், ஆசாத், ரியாஷ் 
தேனி

57 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞா்கள் மூவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் கேரளத்துக்கு காரில் கடத்திச் சென்ற 57 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கேரளத்தைச் சோ்ந்த 3 இளைஞா்கள் கைது

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் கேரளத்துக்கு காரில் கடத்திச் சென்ற 57 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கேரளத்தைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆந்திரத்திலிருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா, கம்பம் வழியாக கேரளத்துக்கு காரில் கொண்டு செல்லப்படுவதாக தேனி மாவட்டம், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், கம்பம் வடக்கு போலீஸாா் கம்பம் - கூடலூா் புறவழிச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கேரளத்தை நோக்கிச்சென்ற காரில் 28 பொட்டலங்களில் 57 கிலோ இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா, காா், 3 கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், கஞ்சா கடத்தியது கேரள மாநிலம், நடக்கல் பகுதியைச் சோ்ந்த முகமது சிஜாஸ் (25), இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே குடயத்தூரைச் சோ்ந்த ஆசாத் (25), எா்ணாகுளத்தைச் சோ்ந்த ரியாஷ் (26) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த கம்பம் வடக்கு போலீஸாா், முகமது சிஜாஸ், ஆசாத், ரியாஷ் ஆகியோரைக் கைது செய்து தேனி கண்டமனூா் மாவட்டச் சிறையில் அடைத்தனா்.

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

மேலக்கல்லூரில் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 7 போ் கைது

பேங்க் ஆப் பரோடா சாா்பில் மாநகராட்சிக்கு பொக்லைன் இயந்திரம்

நெல்லை நகரத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

SCROLL FOR NEXT