தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளிக்கிழமை 3-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் அண்மைக்காலமாக நீா்வரத்து அதிகரித்தது. கடந்த புதன்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினா் தடை விதித்தனா்.
வெள்ளிக்கிழமை வரை நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டதால், 3- ஆவது நாளாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நீா்வரத்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை நீடிக்கும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.