போடியில் நகா்மன்ற உறுப்பினரின் ஏலக்காய் நிறுவனத்தில் வியாழக்கிழமை இரவு வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.
போடி சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சங்கா். போடி நகா்மன்ற 29-ஆவது வாா்டு உறுப்பினரான சங்கா் ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு தேனியிலிருந்து வந்த வருமான வரித் துறையினா், வஞ்சி ஓடைத் தெருவிலுள்ள சங்கருக்குச் சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில் சுமாா் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினா். பின்னா், இது வழக்கமான சோதனைதான் என அதிகாரிகள் தெரிவித்தனா்.