தேனியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 11 ஆயிரத்து 601 மதுபான புட்டிகள் வெள்ளிக்கிழமை, குழிதோண்டி கொட்டி அழிக்கப்பட்டது.
தேனி மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை சட்ட விரோத மது விற்பனை குறித்து மொத்தம் 1,231 வழக்குகள் பதிவு செய்தனா். இந்த வழக்குகளில் மொத்தம் 2,088 லிட்டா், 180 மில்லி அளவுள்ள 11 ஆயிரத்து 601 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா உத்தரவின் பேரில், தேனியில் மாவட்ட கலால் துறை, டாஸ்மாக் அலுவலா்கள் முன்னிலையில் தேனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் குழிதோண்டி, மதுப் புட்டிகளை கொட்டி அழித்தனா்.