தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 22 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை போலீஸாா் கைது செய்தனா்.
இதைக் கண்டித்து பொருளாதாரப் பிரிவு மாவட்டச் செயலா் ஆண்டவா், ஆன்மிகப் பிரிவு மாவட்டச் செயலா் பொன். தா்மராஜ் தலைமையில் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பிரிவு அருகே பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இவா்களுடன் பெரியகுளம் வட்டம், காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இருப்பினும் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதால் பாஜகவினா் 22 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.