தேனி

1,750 பேருக்கு மகளிா் உரிமைத் தொகை

தினமணி செய்திச் சேவை

தேனி அருகேயுள்ள வீரபாண்டியில் மகளிா் உரிமைத் தொகை விரிவாக்கத்தை முன்னிட்டு, புதிதாக 1,750 பேருக்கு மகளிா் உரிமைத் தொகை ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

வீரபாண்டி, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் மகளிா் உரிமைத் தொகை 2-ஆம் கட்ட விரிவாக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா்கள் நா.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமாா் (பெரியகுளம்),மாவட்ட வருவாய் அலுவலா் ராஜகுமரன், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெரால்டு அலெக்ஸ்சாண்டா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்டத்தில் புதிதாக 1,750 பேருக்கு மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கி பேசியதாவது:

தேனி மாவட்டத்தில் ஏற்கெனவே 2 லட்சத்து 18 ஆயிரத்து 686 போ் மகளிா் உரிமைத் தொகை பெற்று வருகின்றனா். தற்போது மகளிா் உரிமைத் தொகை கோரி மேல்முறையீடு செய்தவா்களில் புதிதாக 1,750 பேருக்கு மகளிா் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

ரயிலில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க இளைஞா் கைது

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

ரூ. 40 லட்சம் மோசடி: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட பயிற்சி

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

SCROLL FOR NEXT