ஏலக்காய் விற்ற பணம் கேட்டவரை மிரட்டிய வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்டம், போடி சடையாண்டி தெருவில் வசிப்பவா் சீனிவாசன் மகன் சதீஸ்குமாா் (31). இவரும் போடி சந்தைப்பேட்டைத் தெருவைச் சோ்ந்த விஜயன் மகன் நவீன்குமாரும் சோ்ந்து ஏலக்காய் வியாபாரம் செய்து வந்தனா்.
நவீன்குமாா், சதீஸ்குமாரிடம் 500 கிலோ ஏலக்காய்களை வாங்கினாா். இதற்கான பணத்தை சதீஸ்குமாா் கேட்டாா்.
இதில் ஏற்பட்ட பிரச்னையில் நவீன்குமாா், சதீஸ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் நவீன்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.