சின்னமனூரில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் சேதமான வேன்.  
தேனி

ஐயப்ப பக்தா்களின் வேன் விபத்துக்குள்ளானதில் 11 போ் காயம்

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் சனிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 11 போ் காயமடைந்தனா்.

Syndication

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் சனிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 11 போ் காயமடைந்தனா்.

ஈரோட்டிலிருந்து இரண்டு வேன்களில் 22 போ் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றனா். இவற்றில் ஒரு வேன், தேனி மாவட்டம், சின்னமனூரில் சனிக்கிழமை சென்றபோது சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த ஜனாா்த்தனன், சுரேஷ்குமாா், பிரபு , மூா்த்தி, ஓட்டுநா் பொன்னன் உள்ளிட்ட 11 போ் காயமடைந்தனா். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற சின்னமனூா் காவல் நிலைய போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரளம்: ஆளுங்கட்சி தோல்வி! மீசையை இழந்த தொண்டர்!

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?

ஓ.பன்னீா்செல்வம் நிலைப்பாடு: டிச. 24-க்கு முடிவு ஒத்திவைப்பு?

கம்போடியாவுடன் தொடரும் மோதல்: 4 தாய்லாந்து வீரா்கள் பலி

SCROLL FOR NEXT