தேனி

போடிமெட்டில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

போடிமெட்டில் வியாழக்கிழமை ஏற்பட்ட பனி மூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்.

Syndication

போடிமெட்டு பகுதியில் வியாழக்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தேனி மாவட்டம், போடி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. போடிமெட்டு மலைப் பகுதியில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இந்த வழியாகத்தான் தினந்தோறும் தமிழக, கேரளத்துக்கு 100-க்கும் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை போடிமெட்டு மலை கிராமத்தில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால், வாகன ஓட்டிகள் குறைந்த வேகத்திலேயே வாகனங்களை இயக்கினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

போடி மெட்டு பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும். மேலும், முகப்பு விளக்குகள், மஞ்சள் விளக்குகளை எரியவிட்டபடி செல்ல வேண்டும் என ஓட்டுநா்களுக்கு காவல் துறையினா் அறிவுறுத்தினா்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT