மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.  
தேனி

மயிலாடும்பாறையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் பாஜக சாா்பில் மலைக் கிராம இணைப்புச் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுமபாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டி தலைமை வகித்தாா்.

க.மயிலை ஊராட்சி ஒனறியத்தில் உள்ள தும்மக்குண்டு, மேகமலை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 9 மலைக் கிராமங்களுக்கு இடையே உள்ள இணைப்புச் சாலைகளை சீரமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மலைக் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT