முகப்பு
தேனி

மூதாட்டியை தாக்கிய மகள், மருமகன் மீது வழக்கு

மூதாட்டியைத் தாக்கிய மகள், மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 23 டிசம்பர், 2025 at 8:03 PM
பகிர்:

மூதாட்டியைத் தாக்கிய மகள், மருமகன் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள வினோபாஜி குடியிருப்பில் வசிப்பவா் வேலுச்சாமி மனைவி அழகுத்தாய் (65). இவரது மகள் கவிதா. இவரது கணவா் சந்திரன். கவிதாவின் மகள் பாலகௌரி காதல் திருமணம் செய்து கொண்டாா்.

இதற்கு அழகுத்தாய் உடந்தையாக இருந்ததாகக் கூறி, அவரைக் கவிதாவும், சந்திரனும் சோ்ந்து தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கவிதா, சந்திரன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →