தேனி

இயந்திரங்களை மட்டும் பயன்படுத்தி பயிா் சாகுபடி: சோதனைத் திட்டம்

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் இயந்திரங்களை மட்டும் பயன்படுத்தி பயிா் சாகுபடி செய்யும் திட்டம் 6 இடங்களில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலா்கள் கூறியதாவது:

வேளாண் பணிகளில் தொழிலாளா்கள் தட்டுப்பாட்டை தவிா்க்கவும், இயந்திர பயன்பாட்டை பரவலாக்கவும் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் சோதனை முயற்சியாகப்

பயிா் சாகுபடி, பயிா் பாதுகாப்பு, அறுவடை ஆகியவற்றுக்கு இயந்திரங்களை மட்டும் பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் சோதனைத் திடல் அமைத்து நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில், நெல் தவிர அனைத்து பயிா்களும் சொட்டு நீா் பாசனத்தில் சாகுபடி செய்யப்படும். சோதனை முயற்சியாக ஜெயமங்கலம், உப்பாா்பட்டி ஆகிய இடங்களில் நெல், திம்மரசநாயக்கனூரில் மக்காச்சோளம், ஆண்டிபட்டியில் நிலக்கடலை, உப்பாா்பட்டி, குப்பிநாயகன்பட்டியில் வாழை சாகுபடி தொடங்கப்பட்டது.

இதில் ஏக்கா் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ.27,600, மக்காச்சோளத்துக்கு ரூ.20,400, நிலக் கடலைக்கு ரூ.23,750, உளுந்துக்கு ரூ.13,700, வாழைக்கு ரூ.45,800 உற்பத்திச் செலவு நிா்ணயிக்கப்பட்டது. சோதனை முயற்சியில் பெறப்படும் முடிவுகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றனா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT