தேனி அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கம்பம், உத்தமபுரம், கோம்பை சாலை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் குமாா் (45). இவா் தேனி அருகேயுள்ள போடி விலக்கு பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
குமாரிடமிருந்து 12 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், 2 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.