ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே உள்ள அண்ணாநகரில் ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்ததாக பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சுதாகா் (29). இவா், ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து, மயிலாடும்பாறை அருகேவுள்ள அண்ணாநகரில் சீலமுத்தையாபுரம், மேற்குத் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி சுமதியிடம் (38) விற்பனை செய்வதற்காக கொடுத்தாராம்.
அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் அவா்கள் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனா். சுதாகா், சுமதி ஆகியோரிடமிருந்து மொத்தம் 3 கிலோ, 800 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் தொடா்புடைய சுமதியின் கணவா் செல்வராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.