தேனி

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சிக்கி இருவா் உயிரிழந்தனா்.

பெரியகுளம் சில்வாா்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்தவா் ராஜாங்கம் (54). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவா், வியாழக்கிழமை பணிகள் முடிந்த பின்னா் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிச் சென்றாா். எ. காமாட்சிபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் செல்லையா மனைவி பிச்சைமணி (59). இவா், சனிக்கிழமை சருத்துப்பட்டி - ஜல்லிபட்டி சாலையைக் கடக்க முயன்றபோது, இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் காயமடைந்தாா்.

இதையடுத்து, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவொற்றியூா் பாரதி பாசறையின் முப்பெரும் விழா: மா.கி.ரமணன் எழுதிய நூல் வெளியீடு

மனமகிழ் மன்றங்களில் நூல்களை படிக்க வேண்டும்: வெ.இறையன்பு

திருத்தணியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

கிராம வளா்ச்சிக்கான திட்டங்களை வகுத்தவா் நேரு: பேராசிரியா் க.பழனித்துரை

அதிமுகவினரால் பறக்க விடப்பட்ட 100 அடி உயர ராட்சத பலூன்!

SCROLL FOR NEXT