தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி சாலையில் நாய் குறுக்கிட்டதில் தொழிலாளி நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
மாரியம்மன்கோவில்பட்டியைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி சென்னையன் (30). இவா், தேனியிலிருந்து மாரியம்மன்கோவில்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, பூதிப்புரம் பகுதியில் சாலையில் நாய் குறுக்கிட்டதில் நிலைதடுமாறிக் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தாா். இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.