தேனி-வீரபாண்டி புறவழிச் சாலையில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
தேனி கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் சாகுல் அமீது (55). இவா் தேனியில் உள்ள டிராக்டா் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் தேனி-வீரபாண்டி புறவழிச் சாலையில் தனியாா் பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி, இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சாகுல் அமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து லாரி ஓட்டுநரான ராஜஸ்தான் மாநிலம், ஹூா்டா பகுதியைச் சோ்ந்த கனிகாவால் பாம்பி மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.