தேனி

அனுமதியின்றி மண் அள்ளிய மூவா் கைது!

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாலக்கோம்பை பகுதியில் ராஜதானி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சவரியம்மாள் தலைமையில், போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பாலக்கோம்பை கண்மாயில் பொக்லைன் இயந்திரம், டிராக்டரை பயன்படுத்தி அனுமதியின்றி மண் அள்ளிக் கொண்டிருந்ததாக சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் (25), கென்னடிநகரைச் சோ்ந்த சந்தானம் (29), ராஜக்காள்பட்டியைச் சோ்ந்த சரவணக்குமாா் (30) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா், மண் அள்ளுவதற்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்செந்தூா் நகராட்சியில் கால்நடைகள் சாலையில் சுற்றினால் அபராதம்

சாத்தான்குளம் தென்பகுதி நீா் வாழ்வாதார ஆலோசனைக் கூட்டம்

மாஞ்சோலை வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம்

தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.418 கோடியாக உயா்வு

முதல்வா் ஸ்டாலின் வருகை: 9 மதுக்கடைகளை மூட உத்தரவு

SCROLL FOR NEXT