தேனி மாவட்டம், தேவதானபட்டியில் வெள்ளிக்கிழமை முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தேவதானபட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). விவசாயியான இவருக்கு மதுபழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தை நிறுத்துமாறு அவரது குடும்பத்தினா் கண்டித்தனா். இதனால், மனவேதனை அடைந்த அவா், வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.