தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஓடைப்பட்டி பேரூராட்சியில் 5 இடங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக தோ்தல் பாா்வையாளா் வி.ஜெயன், சின்னமனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் அண்ணாத்துரை ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, வாக்காளா் பட்டியில் படிவங்களில் பெயா், முகவரி, வயது உள்ளிட்ட விபரங்கள் பிழையின்றி பெறப்படுகிா எனஆய்வு செய்தனா். இதில் சின்னமனூா் கிழக்கு ஒன்றியத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.