தேனி

நாளை மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், திங்கள்கிழமை (நவ.17) மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம் சாா் ஆட்சியா் அலுவலகம், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அல்லது மாற்றுத் திறனாளிகளின் பாதுகாவலா்கள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT