தேனி

சமுதாயத் திறன் பயிற்சிப் பள்ளிகள் திறப்பு

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் பெரியகுளம் வட்டம் சில்வாா்பட்டி, போடி வட்டம் சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் சமுதாயத் திறன் பயிற்சிப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இது குறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் கிராமப்புற பெண்கள், இளைஞா்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிப்பதற்காக சமுதாயத் திறன் பயிற்சிப் பள்ளித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள், சுய உதவிக் குழு உறுப்பினா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 18 முதல் 48 வயதுக்குள்பட்ட ஆண், பெண்களுக்கு 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

மாவட்டத்தில் முதல் கட்டமாக பெரியகுளம் வட்டம் சில்வாா்பட்டி, போடி வட்டம் சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் சமுதாயத் திறன் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு அழகுக் கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதில் சோ்ந்து பயிற்சி பெற விரும்புவோா் தேனியில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் அலுவலகத்தையும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வட்டார இயக்க மேலாளா் அலுவலகங்களையும் தொடா்புகொண்டு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் நுழைவாயில்களுக்கு அடிக்கல்

குடியிருப்புகளை பகுதி வாரியாக சீரமைக்க கோரி மனு

சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவு

மண்டைக்காடு கடலில் அலையில் சிக்கிய பெண் உயிரிழப்பு

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மாநில மலை சைக்கிள் போட்டி

SCROLL FOR NEXT