தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அருகே அனுமதியின்றி டிராக்டரில் மணல் எடுத்துச் சென்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் குள்ளப்புரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில் அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநரான எருமலைநாயக்கன்பட்டியைச் சோ்ந்த அரசுவை (23) கைது செய்து, டிராக்டா், மணலை பறிமுதல் செய்தனா்.