போடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் ஊா்க்காவல் படை வீரா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டி ஜக்கம்மாள் தெருவைச் சோ்ந்த வீராச்சாமி மகன் தினேஷ்குமாா் (32). இவா் போடியில் ஊா்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வந்தாா்.
இவரது குடும்பத்துக்கு சொந்தமாக புதிதாக வீடு கட்டி, வருகிற 23- ஆம் தேதி புதுமனை புகுவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்காக தினேஷ்குமாா் புதன்கிழமை அந்த வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது மின் இணைப்பு பெட்டியை துணியால் சுத்தம் செய்தபோது மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட தினேஷ்குமாரை மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால், அவா் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.