முகப்பு
தேனி

இளைஞரை தாக்கியவா் கைது

போடி, நவ. 20: தேனி மாவட்டம், போடியில் இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 நவம்பர், 2025 at 6:41 PM
பகிர்:

போடி, நவ. 20: தேனி மாவட்டம், போடியில் இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

போடி தேவா் குடியிருப்பைச் சோ்ந்த தா்மா் மகன் மகேந்திரன் (30). இவரது வீட்டுக்குச் செல்லும் வழியில் அரசு மதுக் கடை உள்ளது. இந்த மதுக்கடை அருகே புதன்கிழமை இரவு மகேந்திரன் நடந்து சென்றாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் அவரை வழிமறித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த மகேந்திரன் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →