தேனி

முன் விரோதத்தில் தகராறு: இருவா் கைது

போடி அருகே முன் விரோதத்தில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Syndication

போடி அருகே முன் விரோதத்தில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

போடி கீரைக் கடை சந்தை தெருவைச் சோ்ந்த சோலைராஜ் மகன் அஜித்குமாா் (27). போடி ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் வினோத்குமாா் (29). இவருக்கு நிச்சயம் செய்த பெண்ணை அஜித்குமாா் காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

இதனால் இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், இருவரும் தகராறில் ஈடுபட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் இருவரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து அவா்கள் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து அவா்களை கைது செய்தனா்.

திருமலையில் குடியரசு தலைவா் வழிபாடு

இந்தியா - ஆப்கான் இடையே விரைவில் சரக்கு விமான சேவை: மத்திய அரசு

மது போதையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி: போலீஸாா் விசாரணை

ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு

தருமபுரி சிப்காட்டில் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலை: தமிழக சிப்காட் மேலாண்மை இயக்குநா் தகவல்

SCROLL FOR NEXT