தேனி

உத்தமபாளையத்தில் குறுகிய சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

உத்தமபாளையம் கிராமச் சாவடி பகுதியில் குறுகலான நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பகுதி.

Syndication

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் குறுகிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் முக்கிய பகுதியாக திகழ்வது உத்தமபாளையம்- போடி மாநில நெடுஞ்சாலையாகும். இதில் புறவழிச்சாலை சந்திப்பு, கிராமச் சாவடி, கல்லூரிச் சாலை, கோம்பை சாலை வழியாக கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் கடந்து போடிக்கு செல்லலாம்.

இந்த நிலையில், உத்தமபாளையம் கிராமச் சாவடி அலுவலகம் முன் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் குறுகலான வளைவு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதையடுத்து அந்தச் சாலையை அகலப்படுத்த முடிவு செய்த உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் போக்குவரத்து இடையூறாக இருந்த பழைமையான வேப்ப மரத்தை கடந்தாண்டு வெட்டி அகற்றினா். ஆனால், சாலையை விரிவாக்கம் செய்யாமல் பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பகுதியை அப்படியே விட்டுச் சென்ால் மீண்டும் பழைய நிலையே நீடித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, உத்தமபாளையம் கிராமச் சாவடி முன் செல்லும் குறுகலான நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதோடு, கல்லூரிச் சாலை, கோம்பை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT