போடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் கணவரும் மனைவியும் பலத்த காயமடைந்தனா்.
போடி அருகேயுள்ள தம்மிநாயக்கன்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (49). இவரது மனைவி கலைச்செல்வி (38). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் போடி-தேவாரம் சாலையில் சனிக்கிழமை சென்றனா். போடி ரெங்கநாதபுரம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத காா் மோதியதில் ராஜாவும் கலைச்செல்வியும் பலத்த காயமடைந்தனா்.
அருகிலிருந்தவா்கள் இவா்களை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனா்.